ஸ்ரீசைலத்தில் பெரியவா இருந்த சமயம் அது, மலை ஜாதிக்காரர்கள் இருக்கும் இடம். பெரியவா யானை, குதிரை, பரிவாரங்களுடன் வருவதைப் பார்த்தவுடன், வில்லையும் வாளையும் தூக்கிக் கொண்டு சண்டைக்கே வந்துவிட்டார்கள். மடத்துக்காரர்கள் பயந்துபோய் பெரியவாளிடம் வந்து, "என்ன இப்படி ஒரு இடத்தில வந்து மாட்டிண்டமே " என்று சங்கடப்பட்டார்கள். "நான் பார்த்துக் கொள்கிறேன் - பயப்படாதீர்கள்" என்று நேரே அவர்கள் எதிரிலே பொய் பெரியவா நின்றார். அவ்வளவுதான். மலை ஜனங்கள், கருணையே உருவான பெரியவாளைப் பார்த்ததும் அப்படியே ஆச்சர்யத்தில் உறைந்துவிட்டனர். அதோடு நிற்காமல் " சாமி , நாங்க ஏதாவது செய்யணுமா?" என்று கைங்கர்யம் செய்ய முன்வந்து விட்டனர் . அந்த இடம் காடு. துஷ்ட மிருகங்கள் வர வாய்ப்புண்டு. அதனால், மலை ஜாதியினர் தாங்களாகவே முன்வந்து, பெரியவா முகாமிட்டிருந்த இடத்தைச் சுற்றி இரவில் பாதுகாக்க நின்றுவிட்டனர்.
பெரியவாளோ "அப்படி என்னதான் சொல்கிறார்கள் ?" என்று தூண்டித்
துருவிக் கேட்ட பிறகு வேறு வழியில்லாமல் "அவாளுக்கெல்லாம் ஏதோ டான்ஸ் அடைத்த தெரியுமாம். அதைப் பெரியவா பார்க்கணுமாம். இதெல்லாம் வழக்கமில்லை என்றால் புரிந்துகொண்டால் தானே " என்று மானேஜர் முணுமுணுக்கிறார். இவருடைய கவலை , 'இவர்கள் இப்போ டான்ஸ் ஆட ஆரம்பித்தால் , எப்போ குளித்து பெரியவா ஸ்நானம் பண்ணி, பூஜை முடித்து, ஆகாரம் பண்ணுவது?' என்பதுதான். அதனால்தான் தடுத்துவிட நினைத்தார். பெரியவாளோ, "நான் இவா ஆசைப்படி ஆடறதைப் பார்க்கறேன். ஆனா, ஒரு கண்டிஷன் - வயது வந்த ஸ்த்ரீகள் ஆடக் கூடாது. குழந்தைகள், ஆண்கள் மட்டுமே ஆடலாம் என்று சொல்லிவிடு" என்றார், எந்த நிலையிலும் தர்மத்தை மீறாத மகா பெரியவா. இவருடைய ஆஸ்ரம தர்மத்துக்கு, ஸ்த்ரீகள் ஆடுவதைப் பார்க்கக்கூடாது . 'அப்படியே செய்கிறோம் என்று ஆனந்தத்தின் எல்லையில் நின்று அட்டகாசமாய் கூத்தாடினார்கள் அப்பாவி மலைஜாதியினர். எல்லாவற்றையும் அனுபவித்துப் பார்த்துவிட்டு பெரியவா, "இப்போ, இவா ஆடின ஆட்டத்துக்கு என்ன பெயராம்? எப்போதெல்லாம் ஆடுவாளாம்" என்று கேட்டார். அதற்கு அந்தத் தலைவர், "எங்க நெருங்கின உறவுக்காரர் வந்த என்ன மாதிரி டான்ஸ் ஆடுவோமோ அதைத்தான் ஆடினோம்" என்றாராம். அது கேட்டு மானேஜர், அவர்களைப் புரிந்து கொள்ளாமல் போனதுக்கு வெட்கினார்.
ஒரு மலை ஜாதியினருக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி மிக நெருங்கிய உறவினராகத் தெரிந்த அற்புதத்தை இங்கே பார்க்கிறோம். எல்லாருக்கும் அவர் பந்து அல்லவா?
No comments:
Post a Comment