Friday, July 2

Have you seen God | Sri Ramakrishna Paramahamsa

 ராமக்ருஷ்ண பரமஹம்ஸரிடம் டாக்டர் ஒருவர் வந்தார்.

“ஐயா நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?” என கேள்வி கேட்டார். “ஓ! பார்த்திருக்கிறேனே!! காலையில் கூட அவளிடம் பேசினேன்” என்று பரமஹம்சர் பதிலளித்தார்.
“நீங்கள் பார்த்தது உண்மை என்றால் எனக்குக் காட்டுங்கள்”
சுற்றி அமர்ந்திருந்தவர்கள் பரமஹம்ஸர் என்ன பதில் சொல்வார் என ஆவலோடு காத்திருந்தனர்.அப்போது சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் கேள்வி எழுப்பிய டாக்டரிடம், “நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்?” என்று வினவினார் ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்.

“நான் டாக்டர் வேலை செய்கிறேன்”
“அப்படியானால் டாக்டர் தொழில் நன்றாகத் தெரியும் தானே?”
“நன்றாகத் தெரியும்”
“அப்படியானால் என்னை ஒரு டாக்டர் ஆக்குங்கள்”
“அது எப்படி? நீங்கள் டாக்டருக்குப் படிக்க வேண்டுமே?”
“டாக்டராவதற்கே ஒரு படிப்பு வேண்டும் என்றால்,கடவுளைப் பார்க்க ஒரு படிப்பு வேண்டாமா? நான் அதைப்படித்திருக்கிறேன்.நீங்களும் அதைப் படித்தால் கடவுளைக் காணலாம்” என்றார் ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்.
எல்லோரும் வியந்து மகிழ்ந்தனர்.

தீசக் கத்தரிக்காய் கறி | Burnt Brinjal Curry for Neivedhyam

 தீசக் கத்தரிக்காய் கறி'

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
பரமாச்சார்யாரை தெய்வமாகக் கொண்டாடிய பல பக்தர்களில் ஒருவரது கதை.
அந்த பக்தருக்கு மூன்று மகன்கள். மூவருக்கும்திருமணமாகி ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாகவாழ்ந்து வந்தனர்.ஒவ்வொரு மாட்டுப்பெண்ணும் ஒவ்வொரு வாரம் சமையல் செய்வது வருவது வழக்கம்.
அப்படி இருக்கும் போது, இந்த பக்தர் தினமும்பூஜை முடிந்தவுடன்

நைவேத்தியத்திற்கு தயாராக அன்று செய்துள்ள அனைத்தையுமே வைத்து படைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.(அன்னம் மட்டுமே காண்பிப்பதுபலர்வழக்கம்)நைவேத்தியம் நம்பெரியாவாளுக்குத்தான்
.அவ்வாறு ஒருநாள் அவரது கடைசி மருமகள்சமையல் முறை.அன்று அன்னத்துடன் ஒருகத்தரிக்காய் வதக்கல்கறியும் பண்ணியிருந்தார்.
சிரத்தையுடன்தான் சமைத்தாள் அந்தப் பெண்.ஆனால் கறி கொஞ்சம் தீய்ந்து விட்டது நைவேத்திய நேரம் வந்தவுடன் வழக்கப்படி சமைத்த எல்லாப் பண்டங்களையும் வைத்தாள்
.அவர், "ஏனம்மா இப்படி கத்தரிக்காய் தீய்ந்துவிட்டது" என்று கேட்கிறார்.மாட்டுப்பெண்,"என்ன செய்வது மாமா இப்படி ஆகிவிட்டது"என்று சொல்கிறாள்.இது நடந்து நான்கைந்து மாதங்கள் ஆகியிருக்கும்.பெரியவா தரிசனத்துக்கு இந்த குடும்பத்தினர் சென்றுள்ளனர்.
அப்போது பெரியவா யதேச்சையாக அந்த பக்தரின் கடைசி மாட்டுப்பெண்ணைப் பார்த்து "நீ தானே அன்றைக்கு ஒரு நாள் நைவேத்தியத்திற்கு தீச கத்தரிக்காய் வைத்தவள் என்று சொல்லி புன் சிரிப்பு சிரிக்கிறார்.
அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்.தனது வீட்டில் நடந்தபூஜையில் பெரியவாகலந்துகொண்டுள்ளார்என்றபூரிப்பு ஒருபக்கம்இருந்தாலும்,அதை இவ்வளவு துல்லியமாகக் கூற யாரால் முடியும்? என்ற வியப்பு.பக்தர்களின்பால் அவர் காட்டும் பரிவு,அன்பு இதைத்தான் "தாயிற்சிறந்த தயாவான தத்துவன்"என்று நாம் புரிந்து கொள்வோம்
Jaya Jaya Shankara hare hare Shankara
Related Posts Plugin for WordPress, Blogger...