Wednesday, August 28

Sanctity of Rudraksha Mala - Telling Lies a Sin

பெரியவா சரணம்
மஹா பெரியவா பக்தர்  ஒருவர் ஒரு முறை  நேபாளம் சென்று, ஸ்ரீ பசுபதி நாதரை  தரிசனம் செய்து, அந்த உன்னதமான  க்ஷேத்திரத்தில், உயர்ந்த  ருத்ராக்ஷ மாலை  ஒன்றை வாங்கிக் கொண்டார்..
பிறகு, ஸ்ரீ மடம்  வந்து  பெரியவாளுக்கு  பசுபதி நாத்  ப்ரஸாதத்தையும், தான்  வாங்கிய ருத்ராக்ஷ மாலையையும்  ஸமர்ப்பித்தார்...
"பசுபதீஸ்வரரை  நன்னா தர்ஸனம் பண்ணினியா?"
"பெரியவா அநுக்கிரஹத்ல நன்னா தர்ஸனம்  பண்ணினேன்.."
பெரியவா  கையில்  அந்த  ருத்ராக்ஷ மாலையை  எடுத்துக் கொண்டார்.
"ஸெரி... இத.. என்ன  பண்ணப் போற?"
"பெரியவா  அநுக்கிரஹம் பண்ணிக் குடுத்தேள்.. ன்னா  கழுத்துல
  போட்டுக்கலான்னு... "இழுத்தார்..
மஹா பெரியவா  மௌனமாக  சில நிமிஷங்கள்  இருந்தார்..
" அப்போ... நீ.. இனிமே  பொய் சொல்லாம  இருப்பியா?"
ஒரே தடாலடியாக கேட்டார்... பக்தருக்குத்  தூக்கி வாரிப் போட்டது!
"ஆஹா! பெரியவா... இனிமே பொய்யே  சொல்ல மாட்டேன்! "
இப்படி ஒரு துணிச்சலான  பொய்யை,  ஸத்ய  ஸந்நிதியில் சொல்ல  நாக்கு  எழுமா?
"இல்ல... பெரியவா.. ஸத்யமா  என்னால  பொய் சொல்லாம இருக்க முடியாது...!"
"ஏனோ..?"
"ஏன்னா, நா.. ஒரு  வங்கி அதிகாரி.. அதனால, பொய்  சொல்லாம  சில ரெக்கார்டுகளை  தயாரிக்க முடியாது.. 'இப்படி எழுது' ன்னு  எனக்கு  மேல  இருக்கற  அதிகாரி உத்தரவு  போட்டா  என்னால மறுக்க முடியாது  பெரியவா... "
பரிதாபமாக  தன்  இயலாமையை ஒத்துக் கொண்டார்..
பெரியவா அந்த  ருத்ராக்ஷ மாலையை  கையில் வைத்து உருட்டிக்  கொண்டிருந்தார்..
" இந்தா பிடி!  பொய்  சொல்லாதவா யாருக்காவது... இந்த  மாலையைக் குடு! "
பக்தருக்கோ  பரம ஸந்தோஷம்! ஏனென்றால், இப்போது இதை யாருக்கு  போடுவது என்பது,  ஏற்கெனவே முடிவு செய்திருந்த ஒன்று தான்!
நமஸ்காரம்  பண்ணி விட்டு, பெரியவா விடமிருந்து அந்த ருத்ராக்ஷ  மாலையை  வாங்கிக் கொண்டார்..
" ஆஹா! என்  மனைவி சொன்னா மாதிரியே  ஆச்சு! இந்த  ருத்ராக்ஷ மாலையை  பேசாம  ஆத்துல  மஹா பெரியவாளுக்கு (படத்துக்கு) போட்டுடுங்கோ!... ன்னு  சொன்னா! அதுப்படியே தான்  இப்போ மஹா பெரியவாளும்  உத்தரவு  போட்டுட்டா!.."
ப்ரஸாதம்  வாங்கிக் கொண்டு வீடு திரும்பியதும், முதலில்  அந்த ருத்ராக்ஷ மாலையை, பூஜையிலிருந்த மஹா பெரியவா படத்திற்கு அணிவித்தார்..
" பொய்யே சொல்லாத ஒருத்தர், நம்மாத்து  பூஜை ரூம்லயே  இருக்கார்.... "என்று  மனைவியிடம் கூறி  ஸந்தோஷப்பட்டார்...
கணவனும், மனைவியும் ருத்ராக்ஷ மாலாதரனாக  காட்சியளித்த  தங்களுடைய  மஹா பெரியவாளை நமஸ்கரித்தனர்..
கொஞ்ச நான்  கழித்து,  அந்த  பக்தரின்  சொந்தக்காரர் ஒருவர், பெரியவாளை தர்ஸனம் பண்ண வந்தார்...
" ஒன்னோட ஸொந்தக்காரன், அதான்!  அந்த  வங்கியின் ஆஃபீஸரா  இருக்கானே!  அவன்ட்ட ஹரிச்சந்தரனோட  அம்ஸம் இருக்கு! தெரியுமோ?  ஏன்னா, தன்னால பொய் சொல்லாம  இருக்க முடியாதுன்னு  பொய்  சொல்லாம எங்கிட்டயே  ஒத்துண்டான்.."
ருத்ராக்ஷம்  என்பது, ஸ்படிகம், துளசி போல், மிகவும் பவித்ரமானது.. ருத்ராக்ஷத்தை  அணிபவர்களுக்கு முக்கியமாக  இருக்க வேண்டியது... ஸத்யம்!
ஸத்ய மூர்த்தி பெரியவா சரணம் சரணம்...

Adivasis and Mahaperiyava

ஸ்ரீசைலத்தில் பெரியவா இருந்த சமயம் அது, மலை ஜாதிக்காரர்கள் இருக்கும் இடம். பெரியவா யானை, குதிரை, பரிவாரங்களுடன் வருவதைப் பார்த்தவுடன், வில்லையும் வாளையும் தூக்கிக் கொண்டு சண்டைக்கே வந்துவிட்டார்கள். மடத்துக்காரர்கள் பயந்துபோய் பெரியவாளிடம் வந்து, "என்ன இப்படி ஒரு இடத்தில வந்து மாட்டிண்டமே " என்று சங்கடப்பட்டார்கள். "நான் பார்த்துக் கொள்கிறேன் - பயப்படாதீர்கள்" என்று நேரே அவர்கள் எதிரிலே பொய் பெரியவா நின்றார். அவ்வளவுதான். மலை ஜனங்கள், கருணையே உருவான பெரியவாளைப்  பார்த்ததும் அப்படியே ஆச்சர்யத்தில் உறைந்துவிட்டனர். அதோடு நிற்காமல் " சாமி , நாங்க ஏதாவது செய்யணுமா?" என்று கைங்கர்யம் செய்ய முன்வந்து விட்டனர்  . அந்த இடம் காடு. துஷ்ட மிருகங்கள் வர வாய்ப்புண்டு. அதனால், மலை ஜாதியினர் தாங்களாகவே முன்வந்து, பெரியவா முகாமிட்டிருந்த இடத்தைச் சுற்றி இரவில் பாதுகாக்க நின்றுவிட்டனர்.

செஞ்சூஸ் என்ற அந்த மலை ஜாதி மக்களின் தலைவர் ஒரு நாள் பெரியவாளிடம், "நீங்களெல்லாம் இங்கிருந்து கிளம்புவதற்கு முன், எங்கள் சின்ன ஆசையை சாமி பூர்த்தி பண்ணனும். உங்களுக்கு எங்கள் வழக்கப்படி மரியாதை செய்யணும். அதற்காக ஏற்பாடு பண்ணுங்கள்" என்றார். பெரியவா மறுக்கவில்லை. மறு  நாள் எல்லாரும் தேன், பழம் போன்ற காணிக்கைகளுடன் அவர் திருமுன்பு கூடினர். வணங்கினர். ஆசி பெற்றனர். அதற்கு பிறகு தலைவர் மானேஜரை பார்த்து ஏதோ கேட்டார். அவரோ பலமாகத் தலையை அசைத்து மறுக்கிறார். அது என்ன விஷயம் என்று பெரியவா சொல்லச் சொல்கிறார் . மானேஜரோ , "சம்பிரதாயத்துக்கு விரோதமாக என்னமோ செய்ய ஆசைப்படுகிறார்கள். அதை நான் வேண்டாம் என்று மறுக்கிறேன்" என்றார்.

பெரியவாளோ "அப்படி என்னதான் சொல்கிறார்கள் ?" என்று தூண்டித் 
துருவிக் கேட்ட பிறகு வேறு வழியில்லாமல் "அவாளுக்கெல்லாம் ஏதோ டான்ஸ் அடைத்த தெரியுமாம். அதைப்  பெரியவா பார்க்கணுமாம். இதெல்லாம் வழக்கமில்லை என்றால் புரிந்துகொண்டால் தானே " என்று மானேஜர் முணுமுணுக்கிறார்.  இவருடைய கவலை , 'இவர்கள் இப்போ டான்ஸ் ஆட ஆரம்பித்தால் , எப்போ குளித்து பெரியவா ஸ்நானம் பண்ணி, பூஜை முடித்து, ஆகாரம் பண்ணுவது?' என்பதுதான். அதனால்தான் தடுத்துவிட நினைத்தார். பெரியவாளோ, "நான் இவா ஆசைப்படி ஆடறதைப் பார்க்கறேன். ஆனா, ஒரு கண்டிஷன் - வயது வந்த ஸ்த்ரீகள்  ஆடக்   கூடாது. குழந்தைகள், ஆண்கள் மட்டுமே ஆடலாம் என்று சொல்லிவிடு" என்றார், எந்த நிலையிலும் தர்மத்தை மீறாத மகா பெரியவா.  இவருடைய ஆஸ்ரம தர்மத்துக்கு, ஸ்த்ரீகள்  ஆடுவதைப் பார்க்கக்கூடாது . 'அப்படியே செய்கிறோம் என்று ஆனந்தத்தின் எல்லையில் நின்று அட்டகாசமாய் கூத்தாடினார்கள் அப்பாவி மலைஜாதியினர். எல்லாவற்றையும் அனுபவித்துப் பார்த்துவிட்டு பெரியவா, "இப்போ, இவா  ஆடின ஆட்டத்துக்கு என்ன பெயராம்? எப்போதெல்லாம் ஆடுவாளாம்" என்று கேட்டார். அதற்கு அந்தத் தலைவர், "எங்க நெருங்கின உறவுக்காரர் வந்த என்ன மாதிரி டான்ஸ் ஆடுவோமோ அதைத்தான் ஆடினோம்" என்றாராம்.  அது கேட்டு மானேஜர், அவர்களைப்  புரிந்து கொள்ளாமல் போனதுக்கு வெட்கினார்.

ஒரு மலை ஜாதியினருக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி மிக நெருங்கிய உறவினராகத் தெரிந்த அற்புதத்தை இங்கே பார்க்கிறோம்.  எல்லாருக்கும் அவர் பந்து அல்லவா?

Wednesday, August 7

Roja Garland For Maha Periyava

பகவான் ஸர்வவ்யாபி
------------------------------------
பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டது திரு நடராஜசாஸ்த்ரிகள் குடும்பம். அவர்
தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில்டிரஸ்டியாக இருந்த சமயம். பெரியவா தஞ்சாவூரில்முகாம். பெரியவாளுக்கு ஒரு அழகான ரோஜாமாலையை அணிவிக்க வேண்டும்
என்று கொள்ளை ஆசை! பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்துரொம்ப அழகான குண்டு
குண்டு பன்னீர் ரோஜாக்களை பொறுக்கி எடுத்து கட்டச்சொல்லி, பெரியவாளை தர்சனம்
பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு போனார். ஆனால்,இவர் போய் சேருவதற்குள்
தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார்.நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப வருத்தம்! மாலையோடுவீடு திரும்பினார். அவருடைய மனைவி”எல்லாமே பெரியவாதானே? இந்த மாலையைஅம்பாளுக்கே போட்டுடுங்கோ. பெரியவாளும் அம்பாளும்வேறவேறயா என்ன?” என்றாள்.
“இல்லே, இல்லே, அம்பாளும் பெரியவாளும் வேறவேற இல்லேதான். ஆனாலும், இந்த மாலை நாம ப்ரத்யக்ஷமா பாக்கற பெரியவாளுக்குத்தான்! ஆமா. இதுஅவருக்கு மட்டுந்தான்!” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு, அதைபூஜை ரூமில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கவிட்டார்.
மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும்,பெரியவா மேலவீதி சங்கரமடத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரம்வந்து, நடராஜ சாஸ்த்ரிகள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில்
தர்சனம் பண்ண வருவதாக தெருவே திமிலோகப்பட்டது! சாஸ்த்ரிகள் வீட்டிலும்ஒரே பரபரப்பு!
“பெரியவா வரா! பெரியவா வரா! தர்சனம் பண்ணிக்கோங்கோ!”மடத்து பாரிஷதர் உச்சஸ்தாயியில் தெருவில்சொல்லிக் கொண்டேபோனார்.உடனே வீடுகளுக்குள் இருந்தவர்கள்நண்டு சிண்டுவிலிருந்து தாத்தா, பாட்டி வரை அவசரஅவசரமாக பூர்ணகும்பம், குத்துவிளக்கு, புஷ்பம் சஹிதம் அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர்!பெரியவாளுடைய வேகம் அப்படி இருக்கும்! குள்ள உருவமாக இருந்தாலும், அவர் என்னவோசாதாரணமாக நடப்பது போல் இருக்கும். ஆனால், கூட வரும் நெட்டை மனிதர்கள் கூட குதிகால்பிடரியில் அடிக்க ஓடி வரவேண்டியிருக்கும். அந்தவேகம், உண்மையான மஹான்களுக்கே உரித்தான லக்ஷணம்!
பெரியவா நேராக பிள்ளையாரை தர்சனம் பண்ணிவிட்டு,சற்றும் எதிர்பாராமல், “டக்”கென்று
சாஸ்த்ரிகள் வீட்டுக்குள் நுழைந்து, ரொம்ப ஸ்வாதீனமாகபூஜை ரூமுக்குள் போய், முன்தினம்
“பெரியவாளுக்குத்தான்!” என்று முத்ரை குத்தப்பட்டு,ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ரோஜா மாலையைஅப்படி லாவகமாக, யானை தும்பிக்கையால் தூக்குவதுபோல், அருட்கரத்தால் தூக்கி, தானே தன் தலையில் சூடிக்கொண்டார்!சாஸ்த்ரிகளும் குடும்பத்தாரும் கண்களில் தாரைதாரையாக நீர் வழிய, விக்கித்து நின்றனர்!ஹ்ருதயமே வெடித்துவிடுவது போன்ற சந்தோஷம்! இப்படி ஒருபரமகருணையா? என்று சொல்லமுடியாத ஆனந்தம்!திக்கு முக்காடினார்கள்.
எல்லாரும் நமஸ்கரித்ததும், விடுவிடென்று வாசல்பக்கம்நடந்தார். சற்று நின்று திரும்பி,
“எங்கே வெள்ளிக்கிண்ணம்?” என்று சாஸ்த்ரிகளிடம் கேட்டார்.அவ்வளவுதான்! ஆடிப் போய்விட்டார் சாஸ்த்ரிகள்!நேற்று மனைவியிடம் பெரியவாளுக்கு ஒரு வெள்ளிக் கிண்ணம்குடுக்கணும் என்று சொல்லி, ஒருபுது கிண்ணத்தையும் எடுத்து வைத்திருந்தார். இதோ!
அவர்கள் நேற்று பேசியதைஏதோ பக்கத்திலிருந்து கேட்டதுபோல்அல்லவா’வெள்ளிக்கிண்ணம்
எங்கே?’ என்று கேட்கிறார்! ஓடிப் போய் பீரோவிலிருந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டுவந்து சமர்ப்பித்தார்.
பகவான் ஸர்வவ்யாபி! என்பதைஅன்று எல்லாரும் ப்ரத்யக்ஷமாக கண்டார்கள், உணர்ந்தார்கள்!
#2012post

Sri Lalitha Navarathina Malai - Lyrics & Audio



ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை
ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான சத்குரு சரணம் சரணம்
ஞானானந்தா சரணம் சரணம்
காப்பு
ஆக்கும் தொழில் ஐந்தர நாற்ற நலம்
பூக்கும் நகையால் புவனேஸ்வரி பால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே !
வைரம்
கற்றும் தெளியார் காடேக்கதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெரியார் நினையேன்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!
நீலம்
மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒலிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவர்றேளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!
முத்து
முத்தே வரும் முத்தொழிலார் றிடவே
முன்னின்றருளும் முதல்வீ சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாதவரம் தரவே வருவாய்
மத்தேறு ததிகினை வாழ்வுடையேன்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!
பவளம்
அந்தி மயங்கிய வானவிதானம்
அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் மொழிபாரோர்
தேம்பொழிலாமிது செய்தவலாரோ
எந்தை இடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுந்தால்
மந்திர வேதமயப்பொருள் ஆனால்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!
மாணிக்கம்
காணக்கிடையாக் கதியானவளே
கருதக்கிடையா கலையானவளே
பூணக்கிடையா பொளிவானவளே
புனையக்கிடையா புதுமைதவளே
நாணித்திருநாமம் நின் துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்கவொளி கதிரே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!
மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
ஸுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
ஸ்ருதிஜதி லயமே இசையே சரணம்
அரஹர சிவேன் அடியவற்குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வறனவா நிதியே சரணம் சரணம்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!
கோமேதகம்
பூமேவியனான் புரியும் செயல்கள்
போன்றாப்பயனும் குன்றாவரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி என
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வா நிலமே
குழல்வாய் மொழியே வருவாய் வருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!
பத்மராகம்
ரஞ்சனி நந்தனை அங்கனி பதும
ராக விகாசினி யாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்திர கலாதரி ராணி
அஞ்சனா மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள‌ மேரு ஸ்ருங்க நிவாரிணி
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!
வைடூர்யம்
வலையோத்தவினை கலையோத்த மனம்
மருளப் பறையா ரொளியோத்தவிதால்
நிலையர்ரோளிஎன் முடியத்தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையர்ரசைவர் ரணிபூதிபெரும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலைத்துவஜன் மகளே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !

Nondi paiyan with Ramana bhagwan

In 1916, Bhagavan's Mother Azhagammal and her youngest son Nagasundaram came to live with Bhagavan at Virupaksha Cave. A little later, in the same year, it was decided to move into Skandasramam. Bhagavan moved there along with a number of devotees and His animal companions. He would make Skandasramam His abode for the next six years. 
In the days just prior to Bhagavan moving from Virupaksha Cave to Skandasramam, there was a monkey troop near Virupaksha Cave. There was a young monkey in the troop who had started to show some promise, and was gaining popularity within the tribe. The leader of the troop became envious and was very much displeased. Out of jealousy he attacked the young monkey, making him fall from a high tree. The fall badly injured a leg. The leader and the other monkeys abandoned him to his fate near the Virupaksha Cave. Barely conscious, the monkey eventually limped into Virupaksha Cave. The all compassionate  Bhagavan bandaged his l
eg and nursed him back to health. In due course, the injuries were healed but he was left permanently crippled. Bhagavan named him Nondip paiyan, the little Hobbler. He was called Nondi as a pet name as he had to limp while walking or running.
Nondi would always sit on Bhagavan's lap or next to Him while He ate His food. He would never waste food offered to him. He was a scrupulously clean eater. He followed Bhagavan wherever He went, limping along. Even Bhagavan told him not to follow Him, he would follow with great effort.  He developed a fondness for Bhagavan and was devoted to Him, looking up to Him as his Master. Under Bhagavan's loving care, Nondi's leg improved, and he regained his strength. Nondi became a friend not only to Bhagavan but also to other Asramites. They appreciated his charming personality.
But whatever has a beginning has an end too.  Nothing is eternal except the Self. Five days later, the monkeys from Nondi's former troop came to Virupaksha Cave. The asramites saw them coming and were scared that they might hurt Bhagavan. Even Mother Azhagammal felt the same and told Bhagavan to leave Nondi. But Bhagavan assured them that nothing would
happen. The monkeys would not hurt anybody in Virupaksha Cave.

As soon as Nondi saw his troop members, he went and climbed on to Bhagavan's lap. One of the members of the troop came near them and looked at Nondi's bandaged leg, Bhagavan told that monkey that He had applied medicine and bandaged to cure the injured leg. The monkeys were sorry that they had hurt Nondi so badly. They gave a friendly growl and one of them came and pulled Nondi asking him to rejoin the troop. But Nondi did not want to leave Bhagavan. He looked at Bhagavan.
Bhagavan told Nondi, 'Your troop has come to reclaim you. Go with them like a good boy.  Do not forget us when you become a King.' So saying, Bhagavan patted Nondi and sent him back with his relatives. Like other animals the monkeys too have love and attachment to one another.
Nondi used to come to see Bhagavan even after Bhagavan and others moved to Skandasramam. He used to come with his troop and be with Bhagavan for some time. When Azhagammal once gave Nondi food in a separate plate, he refused to eat, preferring to share food with Bhagavan from His plate, helping himself by taking from the plate!
Nondi after eating, would pick up the fallen grains from the floor and made it neat. Bhagavan's appreciated Nondi's smartness.
(Source: Moments Remembered, V. Ganesan; Hobbler and the Monkeys of Arunachala.)
Related Posts Plugin for WordPress, Blogger...