காஞ்சிபுரம் சங்கர மடத்தை ஒட்டி ஒரு இஸ்லாமிய வழிபாட்டு ஸ்தலம் உள்ளது... காஞ்சி பெரியவர் ஸ்ரீ ஸ்ரீ சங்கரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்த காலத்தில், காஞ்சி இஸ்லாமியர்கள் ஒன்று கூடி, அவர்களின் இஸ்லாமிய வழிபாட்டு ஸ்தலத்தை இடம் மாற்ற முடிவு செய்தார்கள்... அப்போது பெரியவர் அந்த இஸ்லாமிய பெரியவர்களை சந்தித்து காரணம் கேட்டார்....
அவர்கள் சொன்னார்கள்.... "உங்களுக்கு எதுவும் இடைஞ்சலாக இருக்குமோ என்றுதான் நாங்கள் இடம் மாற்ற முடிவு செய்திருக்கிறோம்..."
அப்போது பெரியவர் சொன்னாராம்..... அங்கே ஓதப்படும் "பாங்கு"சத்தத்தில் தான் நான் தினசரி துயிலெழுகிறேன்... நீங்கள் எந்த காலத்திலும், எந்த காரணத்திற்காகவும் இடம் மாற்ற கூடாதென்று.
- by Sri Well-Bred Kannan
No comments:
Post a Comment