Periyava–Humour
ஒருமுறை ஏதோ யாத்திரையின் போது வழியில் ஒரு கிராமத்தில் "தொம்பன் கூத்தாடி" குடும்பம் வித்தை காட்டிக் கொண்டிருந்தது. ஒரு கம்பத்தின் மேல் ஏறி ஒருவன் தலைகீழாக தொங்கினான். பிறகு அப்படியே இன்னொரு கம்பத்துக்கு தாவினான். சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்த ஜனங்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். கடைசியில் அந்த ஊர் பெரிய மனிதர் அந்த கூத்தாடிகளுக்கு அரிசி,பருப்பு முதலிய பண்டங்களையும்,வேஷ்டி, பணம் எல்லாம் குடுத்தார்.
இதைப் பார்த்துக் கொண்டே இருந்த பெரியவா ஒரு புன்முறுவலோடு மடத்து மானேஜரிடம் "நானும் சங்கராச்சார்யார் வேஷம் போட்ட தொம்பங்கூத்தாடிதான் ! ஏன்னா, நானும் வித்தை காட்டறேனே! மாடு, யானை, ஒட்டகம், பல்லக்கு, பூஜை..ன்னு வரிசையா வெச்சிண்டு வித்தை காட்றேன்...." என்றார்.
பிறகு மானேஜரிடம் "அவனுக்கு அரிசி, புளி, பணம் குடுங்கோ" என்றார்.
No comments:
Post a Comment