Wednesday, March 25

The greatness of Mahamantra

மஹாமந்திர மாஹாத்ம்யம்

எப்பேர்ப்பட்ட தீயவனாக ஒருவன் இருந்தாலும், பகவானுடைய நாமா036 (பெயர்) அவனைக் காப்பாற்றிவிடும். நெருப்பு என்று தெரிந்து கையை வைத்தாலும் , நெருப்பு கையை எரித்துவிடத்தான் செய்யும். அதேபோல் பகவான் நாமாவின் ஸ்வபாவம் என்னவென்றால், எவர் பகவானின் நாமத்தைச் சொல்வாரோ, அவருடைய பாவத்தை அந்த நாமா நாசம் செய்துவிடும். ஆகையால், நாம் எந்தக் காரியத்தை எப்போது செய்து கொண்டிருந்தாலும் மனதால் மட்டும் பகவான் நாமாவை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

எல்லோருக்கும் தாம் ஏதாவது ஒரு மந்திரத்தை- ஜபத்தைச் செய்து கொண்டு வந்தால் நல்லது என்ற ஆசை ஏற்படுகிறது. இதற்காக மந்திரம் ஒன்று இருக்கிறது. எப்படி வேண்டுமோ அப்படி இம்ம்ந்திரத்தைச் சொல்லலாம். ஒரு புனிதமானவனானாலும், அவ்வாறு இல்லாவிட்டாலும், ஆச்சார சீலனாயிருந்தாலும், இல்லாவிட்டாலும், அவன் அந்த மந்திரத்தைச் சொல்ல்லாம் என்று சொல்லியிருக்கிறது. அது என்ன மந்திரம்?

“ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே |
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ||”

என்ற மந்திரமேயாகும். இந்த மந்திரத்தை எல்லோரும் சொல்லலாம். அப்படிச் சொல்லிக்கொண்டு வந்தால், நாம் பகவானின் அருள் பெற்று புனிதமடைந்து ஜன்ம ஸாபல்யம் அடைவோம். ஆனால் சாமான்யமாக மனிதர்கள் என்ன செய்வார்கள்? சாப்பிடுவார்கள், தூங்குவார்கள், எங்கேயாவது சுற்றிக் கொண்டிருப்பார்கள். பிறகு ஒரு நாள் செத்துப்போய்விடுவார்கள்.இவ்வாறு தான் பிராணிகள் வாழ்கின்றன. நாமும் அப்படியே வாழ்ந்தால் நமக்கும் பிராணிகளுக்கும் என்ன வித்தியாஸம்? ஆகவே, எப்போதும் பகவான் நாமாவை நாம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

-ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...