பிரபல ஹரிகதா விற்பன்னர் ப்ரஹ்ம ஸ்ரீ டி எஸ் பாலக்ருஷ்ண சாஸ்திரிகள் சொன்னது!
ஒரு தடவை கும்பகோணத்திலே, தர்சனத்துக்கு நாங்க எல்லாம் போயிருந்தோம். என் மாமனார் அழைச்சிண்டு போயிருந்தார்.
எனக்கா, மனசிலே ஒரு பயம். ஸ்வாமிகள் ரெண்டு, மூணு ன்னு பண்ணிடுவார், பூஜை முடிக்க. அப்புறம் நம்ப சாப்பிடறதுக்கு இன்னும் நேரம் ஆயிடும் ன்னு...
அதனால நான் பூஜைக்கு வரலை ன்னுட்டு மடத்துக்கு போகலே.
என் மாமனார் இதை திருத்த முடியாது ன்னுட்டு கிளம்பி போய்ட்டார். அங்கே பெரியவா, 'மாப்பிள்ளை (என்னைத்தான்!!) எங்கே?' ன்னுருக்கார்.
'அவருக்கு உடம்பு சரி இல்லே, ரூம்ல இருக்கார்' ன்னு சொல்லி இருக்கார் என் மாமனார்.
'அவரை இங்கே அழைச்சுண்டு வா' என்று சொன்னார் பெரியவாள். வந்து கூப்ட்டா.
எனக்கு கையும் ஓடலே, காலும் ஓடலே...
வெடவெடன்னுண்டு பெரியவா முன்னாடி போய் நின்னேன்.
'ஓடம்பு சரியில்லையோ?' அப்டின்னார் பெரியவா.
நான் மாமனாரை பார்த்தேன்.
'ஆமா, அவருக்கு உடம்பு சரி இல்லே....' ன்னு சொல்லிட்டு இது ஏன் இப்படி படுத்தறது என்கிற மாதிரி பார்த்தார் மாமனார் என்னை.
'ஆமாம் பெரியவா, எனக்கு உடம்பு சரி இல்லே'.
'குளத்துலே குளிச்சியோ?'
திரும்பவும் ஒரு முழி முழிச்சிட்டு, 'ஆமாம் பெரியவா, குளத்திலே குளிச்சேன்'.
'தண்ணி நிறையா இருக்கோ, ரொம்ப ஜில்லுன்னு இருக்கோ'.
'ஆமாம் பெரியவா' என்று சொன்னேன். என் மாமனார் தலையில் தான் அடித்துக் கொள்ள வில்லை என்னை பார்த்தார் பரிதாபமாக.
'ஜுரமோ, உடம்பு ரொம்ப சுடறதோ?' பெரியவா....
'ஆமாம் பெரியவா...' நான்.
'சரி, உடம்பு சரி இல்லேன்னா...ஒண்ணும் சாப்ட படாது. வயத்தை லங்கணம் போடறது தான் அதுக்கு நல்ல மருந்து. நானும் இன்னிக்கு பூஜை
ரொம்ப விஸ்தாரமாவே பண்ணப்போறேன்... அப்படியே ஒரு ஓரமா செவுத்துலே சாஞ்சு ஒக்காந்துக்கோ...மூணு நாலு மணி ஆயிடும்.
பூஜை முடிஞ்சா விட்டு, தீர்த்த பிரசாதம் தரேன். அதை வாங்கிண்டு அப்புறமா கொஞ்சமா ரசஞ்சாதமா சாப்பிடு. எல்லாம் சரியா போயிடும்'.
அத்தனையும் அவா கண்டுபிடிச்சிடுவா...
ஜெய ஜெய சங்கர!
ஹர ஹர சங்கர !