Wednesday, July 17

Hari Narayana Hari Narayana Bhajan

ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நொந்துடலும் கிழமாகி தளர்ந்து பின் நோயில் நடுங்கிடும் போது ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது இன்று சிந்தை கசிந்துனைக் கூவுகிறேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நீடு கபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சை அடைத்திடும் போது விக்கி நாவும் குழறிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடியடங்கிடும் போது எந்தன் ஆவி பிறிந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது நம்பியுனைத் தொழுதேன் அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றமும் ஓவென்று நின்றழுதிடும் போது உயிரோசைகள் ஓய்ந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது பற்றி உனைப் பணிந்தேன் அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா என் பொருள் என் மனை என்பதெல்லாம் இனி இல்லை என்றாகிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா வந்தெமதூதர் வளைத்துப் பிடித்து வாவென்று இழுத்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அந்தத அந்தியம் நீ வர இன்றழைத்தேன் ஸச்சிதானந்தனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
Bookmark and Share

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...